தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் முறைகேட்டில் ஈடுபடுவதாக மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாநில துணைத் தலைவர் நெல்லை நெப்போலியன் மற்றும் நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், “தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ஐய்யப்பன், ஆதிகார துஷ்பிரயோக செயல்கள் மூலம் தொழிலாளர்களை துன்பப்படுத்துவதும், புரோக்கர்கள் (சில மேற்பார்வையாளர்கள்) மூலம் லஞ்ச லாவணியத்தில் ஈடுபட்டு, நிர்வாக சீர்கேடுகளை தொடர்ந்து செய்து வருகிறார்.
குறிப்பாக தமிழக அரசின் ஆணைப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 63 கடைகள் அடைப்பதாக அறிக்கை செய்து 18 கடைகள் மட்டுமே கடை பணியாளர்களுக்கு மூடிவிட்டு மூடிய கலந்தாய்வு மூலம் மாற்று கடையில் பணியாளர்களை நியமிப்பதாக அறிவிப்பு செய்து, தொழிலாளர்கள் கேட்ட கடைகள் காலியாக இருந்தும் புரோக்கர்கள் ஆலோசனைபடி கொடுக்காமல் அதிகார துஷ்பிரயோகம் செய்து பணியாளர்களை நியமிப்பது தொழிலாளர்கள் வேதனைபடும் விதியுமாக உள்ளது.
மேலும் இவரால் லஞ்ச லாவணியத்தில் மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் சீரழிந்து கொண்டு இருப்பதால் மாவட்ட ஆட்சி தலைவர் இவ்மனுவை ஏற்று விசாரித்து டாஸ்மாக் மேலாளரின் மீது நடவடிக்கை எடுக்குமாறு தொழிலாளர்கள் சார்பாக ஏஐடியூசி சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர்.


