ஒரு பார்வை
புகழும் வளமையும் பெற்ற
வற்றாத தாமிரபரணி நதி
பொதிகையிலிருந்து புறப்
பட்டு பல நதிகளோடு
இணைந்து பாபநாசம் வழி
யாக நதியுண்ணி அணைக்
கட்டில் சேர்ந்து கிழக்கு நோக்கி பாய்கிறது. பாபநாசத்திலிருந்து
சுமார் 7வது கி.மீட்டரில்
நதியுண்ணி அணைக்கட்டு வருகிறது. இதிலிருந்து தான்
நதியுண்ணி கால்வாய்
பிரிந்து செல்கிறது.
தாமிரபரணி ஆற்றில்
வெள்ளம் வரும் நாட்களில்
இந்த அணைக்கட்டை தாண்டி தான் தண்ணீர் செல்லும்.
இந்த அணைத் தடுப்பால்
நதியின் படுக்கையில் 15 அடி
ஆழம் தண்ணீர் மேற்கே பாப
நாசம் வரை தேங்கி கிடக்கும்.
தவிர இப்பகுதியிலிருந்து
கூட்டு குடிநீர் திட்டத்தின்
மூலம் கிட்டதட்ட பல கிராமங்
களுக்கும் பல நகர் பகுதிக
ளுக்கும் குடிநீர் எடுத்துச் செல்லப்படுகிறது.
குறிப்பாக காலங்கால
மாக பாபநாசம் கோயில் பகுதி
களில் பக்தர்களால், தன்
பாவம் நீக்க போடப்படும்
ஆடைகள், மற்றும் பிளாஸ்டிக்
இதரக்கழிவுகள் வெள்ளம் மற்றும் சாதாரண காலங்களில்
மெல்ல மெல்ல மிதந்து வந்து
அணையினால் தடுக்கப்
பட்டு 4 கிலோமீட்டர் வரை மேற்கு
நதியின் படுக்கையில் நீரின்
உள்ளே அமிழ்ந்து கிடக்கிறது.
குறிப்பாக அணப்பகுதியில்
மட்டும் 10அடிக்கு மேல் 2 கி.மீ
வரை நீருக்குள் பக்தர்களால்
போடப்பட்ட பரிகாரத் துணி
கள் ஆண்டுக்கணக்காய்
மூழ்கிக்கிடக்கிறது.
முன்பெல்லாம் நாம்
உடுத்தும் ஆடைகள் பருத்தி
துணியால் செய்யப்பட்டது.
அவைகள் நீரில் மூழ்கி கிடந்
தாலும் 6 to 8 மாதங்களில்
இற்றுபோய்விடும். ஆனால்
தற்போது நாம் உடுத்தும்
ஆடைகள் பாலிஸ்டர், கிட்ட
தட்ட பிளாஸ்டிக் மாதிரியே.
நீரில் மூழ்கியதால் 30 – 40
ஆண்டுகள் வரை அப்படியே கெடாமல் இருக்கிறது. இந்த நிலமையில் தான்
ஆண்டுக் கணக்கில் இந்த
இடத்தின்அணைப்பகுதியில்,
துணிகள் நீரில் மூழ்கிக் கிடக்கிறது.
தண்ணீரில் இவை இப்படியே கிடப்பதனால்
மோசமான துர்நாற்றத்துடன்
காணப்படுகிறது.
தேங்கிக் கிடக்கும் துணியை
இப்போது எடுத்துப் பார்த்தாலும்
சகிக்க முடியாததூர்நாற்றத்துடன்
புழுக்கள் அதில் இருப்பதைக்
காணமுடியும். அதோடு ஈகோலி
பாக்டீரியாக்கள் துணியிலே
தங்கி தம் இனத்தை பெருக்கிக்
கொள்கிறது. அதோடு இத்துணி
களிலே ஆலைக்கழிவிலிருந்து
நகர்புற சாக்கடைக்கழிவுகளும் ஒட்டிக் கொள்கிறது.
இந்த தண்ணீர் மூலம் தொற்றுநோய் பரவ
வாய்புகள் அதிக காணப்படு
கிறது. தவிர இந்த அணைக்
கட்டிலிருந்தே பல கிராமங்களுக்
கும், நகரங்களுக்கும்
கூட்டு குடிநீர்த்திட்டத்தின்படி
மக்களுக்கு குடிநீர் வழங்கப்
படுவதால் மாசுப்பட்ட இத்
தண்ணீர் மூலமே, தண்ணீர்
சம்பந்தமான நோய்கள் பரவ காரணமாகிறது.இதை எவ்வாறு
அறியலாம்? இப்பகுதி மூலம்
தண்ணீரைப் பயன்படுத்தும்
கிராம,நகர் பகுதியிலுள்ள
அரசு மற்றும் தனியார் மருத்துவ
மனைகளிலுள்ள
புறநோயாளிகளின் புள்ளி விபரங்களை
ஒப்பிட்டு பார்த்தால் இத்தண்ணீர்
மூலம் பரவும் வியாதிகளின்
உண்மை தெரியவரும்.
(உம்) டெங்கு, காய்சல், வயிற்றுப்
போக்கு, மஞ்சள்காமலை etc.
ஆற்றில் குறைவாக
தண்ணீர் வரும் காலங்களில்
சேரும் சகதியுமாக இப்பகுதி
காட்சி அளிப்பதை காணலாம்.
இதனால் விஷகாய்சல் பரவ
காரணமாகிறது. காரணம்
இப்பகுதியில் ஆண்டுக்
கணக்கில் நீரில் மூழ்கி கிடக்கும்
கழிவு துணிகளும்,
பிளாஸ்டிக்கழிவுகளுமே இதற்கு
காரணம். இதில்தான் வியாதிகளை பரப்பக்கூடிய
கொசுக்கள் முட்டையிடுகின்
றன. சாதாரணகுடிநீரின் pH லெவல் 50 இருந்தால் அது குடிநீருக்கு ஏற்றது என்கின்றனர்
விஞ்ஞானிகள்.
ஆனால் இப்பகுதி நீரின் PH லெவலை ஆய்விட்டுப்
பார்த்தால் 1200 PH வரை வரலாம்.(நாளிதழின் வந்த செய்தி படி)
இப்படி அதிகமான PH லெவல்
வந்தால் எவ்வளவு மாசுகள்
நீரில் சேர்ந்திருக்கும்? இதில்
ரசாயனக் கழிவுகள், சாக்கடைக்
கழிவுகள், பிளாஸ்டிக்கழிவுகள்,
மலஜலக் கழிவுகள், பூக்கள்,
அஸ்தி, சோப்பு, சேம்பு, இலை
தளை, குப்பை கூளங்கள், இறச்சி கழிகள், கழிப்பறைக் கழி
வுகள், வயல்வெளிக்கழிவுகள், ஆலைக்கழிவுகள், etc அதோடு
குடித்துவிட்டு வீசி எறியப்பட்ட
பாட்டில் கழிவுகள் ,ஆக இப்படி
எல்லாம் சேர்ந்த கழிவுகளான
இந்த மாசுபட்ட நீரை
எப்படி குடிநீராய் அருந்த முடியும்?
இங்கிருந்துதான் உறைக்கிணறு
மூலம் கூட்டு குடிநீர் திட்டம்
செயல்படுகிறது.
முதலில் இப்பகுதியை கண்டிப்
பாக தூய்மைப்படுத்தி ஆக
வேண்டும்.
1. கோடைகாலத்தில் பாபனா
சம் அணைக்கட்டிலிருந்துவரும்
நீரை ஒரு 2 நாட்கள்
நிறுத்திவிட்டு இப்பகுதில்
25ஆண்டுகளாக நீரில்
அமிழ்ந்து கிடக்கும் துர்
நாற்றமுள்ள அத்துணி
களை வெளியே எடுக்க
வேண்டும். இதுவரை இப்
பகுதியில் எந்தத் தன்னார்வ
லர்களோ, அரசு துறை மூலமே
துணிகளை தூர்வாரி
எடுத்ததில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.
2. நதியுண்ணி அணைக்கட்
டின் ஒரு பகுதியில் துளை
யிட்டு நீரை முற்றிலுமாக
வற்றவைக்கவேண்டும்
.
3. அதற்கு பின் JCP இயந்திர
மூலம் or கிட்டாச்சி மூலம்
நதியின் உட்பகுதியில்
நீச்சல் தெரிந்த (Skilled labour)
ஆட்களைக் கொண்டோ
( Boat )போட் மூலமாகவோ,
ஆண்டுக்கணக்கில்
தேங்கி கிடக்கும் துணி
கள்,பிளாஸ்டிக் இதரக்
கழிவுகளை அப்புறப்
படுத்த வேண்டும்.
தேங்கி கிடக்கும் கழிவுகள்
சுமார் 500 முதல் 700 டன்
வரலாம்(25 வருட தேக்கம்)
4. நிரந்தரத் தீர்வாய் பாபநாசம்
கோயில் பகுதியில் பக்தர்
களால் தினசரி ஆற்றுக்
குள் போடப்படும் துணி
களை, கழிவுகளை முற்றி
லுமாக ஏதாவது ஒருவகை
யில் நிறுத்தி ஆகவேண்டும்
அதற்கான முயற்சிகளை
கண்டிப்பாக செய்து ஆக
வேண்டும்..
5. இப்பகுதியில்தான், அருகில்
உள்ள ஒரு பெரிய ஆலையின்
ரசாயனக் கழிவுகளும் வந்து
சேருகின்றன, என்பதைக்
கவனத்தில் கொள்ள வேண்
டும்.
6. நதியின் இரு கரைகளிலும்
வெள்ளக் காலங்களில் வந்த
துணிகள் ஆங்காங்கே
மரங்கள் செடிகளில் தங்கிக்
கிடைப்பதைக் காணமுடியும்.
மேற்கண்ட முறையில்
அகற்றினால் மட்டுமே
நீரை சுத்தமாக்க முடியும். ஆற்றின் முகப்பு பகுதியி
லேயே இப்படி என்றால்?
நதி கடலில் சங்கமிக்கும்வரை
எத்தனைஅணைக்கட்டுப்பகுதி
கள் இருக்கின்றன. அத்தனைப்
பகுதிகளில் எவ்வளவு கழிவுகள்
தேங்கிக் கிடக்கும்?
கண்டிப்பாக மாசுகளை
சுத்தம் செய்து ஆகவேண்டும்.
ஆற்றின் ஒவ்வொரு
7கிமீ தூரத்தில் ஆறு அகலம்
குறைவாய் உள்ள இடங்களில்,
ஆற்றின் குறுக்காக கண்
அமைப்புள்ள கம்பிவலை
களை அமைக்க வேண்டும்.
அதில் தேங்கும் சகல கழிவு
களையும் சுழற்சிமுறையில்
ஒருமாதத்திற்குஒருமுறையாவது
நீரிலிருந்து அப்புறப்படுத்தி
சுத்தம் செய்ய வேண்டும்.
இது ஒருசாதாரண திட்டமே. இதற்கு அவ்வளவு செலவு
தேவை வராது.
இதே வழிமுறைகளை அனைத்து கால்வாய்களிலும் செயல்படுத்தலாம்.
நகர், கிராமபுற
சாக்கடை ஓடைகள், ஆறு
அல்லது கால்வாய்களில்
கலக்கும் முகப்பு பகுதிகளில்
இதுபோன்ற கம்பிவலை
களை வைத்து மாதம் ஒரு
முறை சேரும் கழிவுகளை
அகற்றலாம். இப்படி
செய்யாத வரை குடிநீருக்காக
தாமிரபரணியையே நம்பியிருக்
கும் குடிதண்ணீர் விஷமாகும்
காலம் வெகுதூரம் இல்லை. தவிர கழிவுகள் அடங்கிய இத்
தண்ணீரையே இனி அருந்த
வேண்டிய நிலையே வரும்.
அதோடு மட்டுமின்றி
மக்களுக்கும் இதுபற்றிய
விழிப்புணர்வை ஏற்படுத்த
வேண்டும். நல்ல நீர் கிடைக்
காத இக்காலத்தில், இயற்கை
கொடுத்த இந்த ஆற்றுநீரின்
அருமை பெருமை தெரியா
மல், தினசரி நம் அதை
விஷமாக்கிக்கொண்டே
வருகிறோம்.
எப்போது விடிவுகாலம் வரும்?
ஒன்றுபட்டு தாமிரபரணியை தூய்மைப்படுத்த முன்வருவோம்


