இன்றைய தினமலர் மதுரை பதிப்பில் களரி அடிமுறை &1 நூல் விமர்சனம் வெளிவந்துள்ளது. வெளியிட்ட நிர்வாகத்துக்கும் எழுதிய மதி அவர்களுக்கும் நன்றி.
களரி அடிமுறை-1
ஆசிரியர் – முத்தாலங்குறிச்சி காமராசு
வெளியீடு – உலக களரி அடிமுறை கூட்டமைப்பு, சென்னை.
அலைபேசி – 7010180719
பக்கம் – 190
விலை -299
சுய பாதுகாப்புக்கு பயன்படுத்தும் அடிமுறை கலை பற்றி விரிவாக எழுத்தப்பட்டுள்ள நூல், இதை பயிற்றுவிக்கும் ஆசான்களை சந்தித்து தகவல்களை திரட்டி தருகிறது.
மொத்தம், 25 தலைப்பு களை உடையது. கன்னியாகுமரியில் துவங்கி, அமெரிக்கா சென்ற களரி என முதல் இயல் துவங்குகிறது. உலக நாடுகளில் இது பரவும் விதம் பற்றி தெளிவாக எடுத்துரைக்கிறது.
வரலாற்று ரீதியாக அடிமுறைக்கலை தோன்றிய விபரங்கள் உரிய ஆதாரங்களுடன் தரப்பட்டுள்ளது. புராண தகவலும் அலசலுடன் தரப்பட்டுள்ளன. தமிழகத்தில் இந்த கலையின் தீவிரத்துடன் இந்த கலை பற்றிய விபரங்களை மிக தெளிவாக தருகிறது.
இந்த புத்தகத்தை வாசிப்பது, ஒரு பயணம் மேற் கொள்ளும் அனுபவம் போல் இருக்கிறது. தமிழகத்தில் வளர்ந்த அபூர்வ கலையை காட்டும் கருவூலம். & மதி
நூல் வேண்டுவோர் 8760970002 என்ற எண்ணில் தொடர்ப்பு கொண்டு விலாசத்தினை அனுப்பினால் நூல் உங்களை தேடி வரும்.
– அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


