தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகே கொங்கராயகுறிச்சியில் நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு திருவாளி பெருமாள் முத்தார் முப்பிடாதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கொடை விழா கடந்த மே 21 நோன்பு போட்டு தொடங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து திருவாளி பெருமாள் முத்தார் முப்பிடாதி அம்மனுக்கு வைகாசி மாத கொடை விழா மே 28-ம் தேதி முதல் ஜூன் 1- தேதி வரை வெகு விமர்சையாக நடைபெற்றது.
விழாவில் போது ஸ்ரீதேவி பூதேவி சமேத திருவாளி பெருமாளுக்கும் முத்தார் முப்புடாதி அம்மனுக்கு பக்தர்கள் பலர் தாமிரபரணி ஆற்றில் இருந்து பால்குடம் எடுத்து வந்து வேண்டுதலை நிறைவேற்றினர். அப்போது பக்தர் ஒருவர் திருவாளி பெருமாளுக்கு தாமிரபரணி ஆற்றிலிருந்து அங்க பிரதட்சணம் மேற்கொண்டார். இதில் ஊர் பொதுமக்கள் அனைவரும் சாதி, மத வேறுபாடுகள் இன்றி கலந்துகொண்டு அங்க பிரதட்சணம் செய்த சாலையில் தண்ணீரை ஊற்றி உதவி செய்தனர். இந்த நிகழ்வு அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
திருவாளி பெருமாள் முத்தார் முப்பிடாதி அம்மன் கோவில் கொடை விழாவின் போது மழை பொழிவது வழக்கம். இந்த கொடை விழாவின் போதும் அந்த சிறப்பு நிகழ்வு தொடர்ந்தது. இது பக்தர்கள் மத்தியில் மனநிறைவை ஏற்படுத்தியது.
மேலும் முக்கிய நிகழ்வாக கடந்த மே 29- ம் தேதி மற்றும் 31-ம் தேதி கொடை விழாவின் போது மூன்று வேளையும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு வயிராற உணவருந்தி சென்றார்.
இதுதவிர சிறுவர் சிறுமியர் நடன நிகழ்ச்சியும், இசை கச்சேரி மற்றும் கண்ணை கவரும் வானவேடிக்கை நிகழ்வும் நடைபெற்றது.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்
மேலும், இந்த கொடை விழாவுக்காக இன்னும் 5 வருடம் காத்திருக்க வேண்டும் என்று விழா நிறைவில் ஊர் பொதுமக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது


