தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்கு உட்பட்ட ஆழிகுடி கிராமத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஒட்டபிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஆகியோர் முன்னிலை வகித்தார். ஆழிகுடி பஞ்சாயத்து தலைவர் முருகேஸ்வரி தினேஷ் வரவேற்புரை ஆற்றினார்.
தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் 19 பேருக்கு இலவச பட்டா, 3 பட்டா மாற்றம், 2 பயனாளிகளுக்கு கிஷான் திட்ட அட்டை, 10 பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகை ஆகியவைகளை அவர் வழங்கினார். மேலும் பொதுமக்களிடமிருந்து மனுக்களையும் அவர் பெற்றுக்கொண்டார்.
அப்போது எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய தவழ்ந்து வரும் தாமிரபரணி என்னும் நூலை எழுத்தாளர் கனிமொழியிடம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன், சமூக பாதுகாப்புத்திட்ட வட்டாட்சியர் ரமேஷ், துணை வட்டாட்சியர் சிவகுமார், கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன், கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வி, பாக்கிய லீலா, வருவாய் ஆய்வாளர் முத்துராமன், கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த ஜோதி, பஞ்சாயத்து செயலர் முத்து, திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ராமசாமி, கிழக்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ் காந்தி, ஒன்றிய துணைச் செயலாளர் பக்கப்பட்டி சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


