அங்கமங்கலம் ஊராட்சியில் கிராமசபை கூட்டத்தில் துணை ஆட்சியை அமுதா மரக்கன்றுகளை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி ஒன்றியம் அங்கமங்கலம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் பானுப்பிரியா பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சித்தலைவர் நேர்முக உதவியாளர் அமுதா கலந்துகொண்டு மரக்கன்றுகளை வழங்கினார். ஊராட்சி செயலாளர் கிருஷ்ணம்மாள் தீர்மானங்களை வாசித்தார். இதில் இலவச பட்டா மற்றும் முதியோர் உதவி தொகை வருதல், பஞ்சாயத்தில் குப்பையை எடுத்துச்செல்ல ட்ராக்டர் வண்டி வாங்குதல் உள்பட பல தீர்மானங்கள் ஈடுபட்டனர். இதில் மண்டல உதவி வட்டாட்சியர் பொன்செல்வி, வருவாய் ஆய்வாளர் முத்து சரவணன், கிராம நிர்வாக அலுவலர் முத்து, வட்டார சுகாதார ஆய்வாளர் இளங்கோ, உதவி வேளாண்மை அலுவலர் திருச்செல்வம், மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் சமூக ஆர்வலர் டாக்டர் எஸ் ஜே கென்னடி, சமூக ஆர்வலர் தமிழ்ல என். பாலமுருகன் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் முத்து சங்கர், வார்டு உறுப்பினர்கள் ஜெயசித்ரா, பாஸ்கர், அமலி, மாலதி, பொற்கொடி தேவி, சா மதுரை, ரசியா உம்மால், பற்றாளர் அருள்செல்வம், தொழில்சார் சமூக வல்லுநர் சித்ரா லட்சுமி மற்றும் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் திரளானோர் கலந்து கொண்டனர் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது


