தூத்துக்குடி சிவன் கோவிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
குரு பகவான் இன்று மாலை மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆனார். இதனை முன்னிட்டு தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற சிவன் கோயில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரா் திருக்கோவிலில் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு பள்ளி அறை பூஜையும் 5 மணிக்கு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு தீபாரனை நடைபெற்றது.
மாலை 5.19 மணிக்கு குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. 12 ராசிகளுக்கும் உரிய பரிகாரங்கள் செய்யப்பட்டது. பூஜைகளை கோவில் பிரதான பட்டர்கள் செல்வம், சுப்பிரமணியர், சண்முகம் ஆகியோர் நடத்தினர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பரிகார பூஜைகளை செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி தமிழ்ச்செல்வி மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.


