தூத்துக்குடி, பண்டாரம்பட்டி தூ.நா.தி.அ.க. தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தூத்துக்குடி, பண்டாரம்பட்டியில் அரசு உதவிபெறும் தூ.நா.தி.அ.க. தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. 2023 – 2024 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியில் மாணவர் சேர்க்கை பற்றிய வாசகங்களை மாணவர்கள் முழங்கினார்கள்.இப்பேரணியில் மாணவர்களும் மாணவர்களின் பெற்றோர்களும் திரளாக கலந்து கொண்டனர். இறுதியில் தலைமையாசிரியர் நல்லாசிரியர் நெல்சன் பொன்ராஜ் அனைவருக்கும் நன்றி கூறினார்.


