தூத்துக்குடியில் மே தினத்தை கனிமொழி எம்பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் தொழிலாளர் தின நினைவுச் சின்னத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
மே தினத்தை முன்னிட்டு இன்று தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பாக கலைஞர் அரங்கின் வாயிலில் அமைக்கப்பட்ட தொழிலாளர் தின நினைவுச் சின்னத்திற்கு துணைப் பொதுச்செயலாளரும், பாராளுமன்றக் குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி., சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் மாவட்டக் கழக செயலாளருமான கீதாஜீவன் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்ட மாநகர திமுக செயலாளர் எஸ் ஆர் ஆனந்த சேகரன் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் மாநில பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா வழக்கறிஞர் பிரிவு அணி செயலாளர் மோகன்தா சாமிவேல் மாநகர துணை அமைப்பாளர் வழக்கறிஞர் ரூபஸ் ஆசீர்வாதம் மாநகர மருத்துவ அணி துணை அமைப்பாளர் டாக்டர் அருண் குமார் வர்த்தக அணி துணை அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரி தங்கம் மாநகராட்சி மண்டல தலைவர்கள் கலைச்செல்வி அன்னலட்சுமி பால குருசாமி நிர்மல் ராஜ் வட்ட செயலாளர் கதிரேசன் மாநகராட்சி உறுப்பினர்கள் கீதா முருகேசன் சுரேஷ்குமார் ராமகிருஷ்ணன் கனகராஜ் உள்பட ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்


