பொங்கல் திருநாள் அன்று பணிக்கு வராத அரசு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஆப்செண்ட் போட்டு சப்பளத்தை பிடித்த செய்த அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்தை கண்டித்து இன்று தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள அரசு பேருந்த பணிமனை முனடப சிஐடியு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்ட கூட்டத்திற்கு ஸ்ரீவைகுண்டம் சிஐடியு தலைவர் லட்சுமணன் தலைமை வகித்தார். சங்கத்தின் மாநில சம்மேளன குழு உறுப்பினர் சங்கிலி பூதத்தான் கோரிக்கைகளை விளக்கி பேசினார். பணிமனைச் செயலாளர் சிவசுப்பு முன்னிலை வகித்தார்.
முத்துசாமி நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் உலகநாதன், ஆறுமுகம், சுப்பிரமணியன் உட்பட பலர கலந்து கொண்டனர்.


