ஸ்ரீவைகுண்டம் வியாபாரிகள் சங்க அலுவலகத்தில் அனைத்து வியாபாரிகள் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வியாபாரிகள் சங்க அலுவலகத்தில் இன்று அனைத்து வியாபாரிகள் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன் தலைமை வகித்தார். ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் பஜார் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொறுத்துதல், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பார்த்து கொள்ளுவது போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில் ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.


