தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு குறித்த மாநில அளவிலான கருத்தரங்கம் இன்று நடைபெற்றது.
தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியும் நூலகம் மற்றும் தகவல் அறிவியல் முன்னேற்றக் கழகம் (SALIS) திருநெல்வேலி கிளையும் இணைந்து சிறந்த ஆய்வுக்கான சிறந்த கருவிகள் – செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் புதுமை என்ற தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கம் 1.02.2025 சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வர் அ.ஜாய்ஸிலின் சர்மிளா வரவேற்புரையாற்றினார். சலிஸ் திருநெல்வேலி கிளையின் தலைவர் யு.முத்துகிருஷ்ணன் SALIS பற்றி அறிமுகஉரையாற்றினார். அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியின் கல்வியியல் துறை இணைப் பேராசிரியர் இரா.சூர்யகலா கருத்தரங்கினைப் பற்றிய அறிமுக உரையாற்றி, சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். தூத்துக்குடி, காமராஜ் கல்லூரியின் முதல்வர் ஜெ.பூங்கொடி துவக்க உரையாற்றினார்.
கோவை, பி.எஸ்.ஸி பொறியியல் கல்லூரியின் நூலகர் ஜே.ஆறுமுகம், சேலம் விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் நூலக மேலாளர் ஏ. சுபவீரபாண்டியன், பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்வியியல் கல்லூரியின் நூலகர் முனைவா டி.ராஜா ஆகியோர் கருத்துரையாளராகக் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினர். பல்வேறு கல்லூரிகளைச் சார்ந்த நூலகர்கள், ஆய்வு மாணவர்கள், முதுகலை மாணவர்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
மாலையில் நடைபெற்ற நிறைவு விழாவில் SALIS திருநெல்வேலி கிளையின் செயலரும், சாயர்புரம் போப் கல்லூரியின் நூலகர் கே.முத்தரசன் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி வரவேற்புரையாற்றினார். கல்லூரியின் கல்வியியல் துறை உதவிப்பேராசிரியர் நா.சுதாகுமாரி கருத்தரங்க அறிக்கை வாசித்தார். தூத்துக்குடி, தூய மரியன்னை கல்லூரியின் நூலகர் கே.வினிதா நிறைவுரையாற்றினார். கல்லூரியின் நூலகர் இரா.பொன்செல்வி நன்றியுரை வழங்கினார்.


