தூத்துக்குடி அருகே 2 நாட்களில் திருமணம் நடக்க இருந்த நிலையில் புதுமாப்பிள்ளை திடீரென தூக்குபோட்டு தற்காெலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி அருகேயுள்ள தருவைகுளம் ஏ.எம். பட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகன் மெய்யப்ப போஸ் (25). இவர் மேலமருதூர் பவர் பிளான்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வருகிற திங்கள்கிழமை அன்று திருமணம் நடக்க இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை குடும்பத்தினர் செய்து வந்தனர்.
இந்த நிலையில், மெய்யப்ப போஸ்நேற்று இரவு பணி முடித்து இன்று காலை 6:30 மணி அளவில் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் அவர் புதிதாக கட்டியிருக்கும் வீட்டுக்கு சென்றுள்ளார். அவரது பாட்டி பேச்சியம்மாள் காலை 8:30 மணி அளவில் அவரை சாப்பிட அழைக்க செல்லும்போது மெய்யப்ப போஸ் மின்விசிறி மாட்டக்கூடிய கொக்கியில் நைலான் கயிற்றினால் தூக்குபோட்டு தொங்கியுள்ளார்.
இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவரை உறவினர்கள் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் அங்கு அவரை மருத்துவர் பரிசோதித்த போது ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்துள்ளார். அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து தருவைகுளம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


