இந்தியாவில் உள்ள அரியானா மாநிலத்தில் கர்னல் எனும் ஊரில் கல்பனா சாவ்லா ஒரு பஞ்சாபிக் குடும்பத்தில் பிறந்தார். சமஸ்கிருதத்தில் கல்பனா என்றால் கற்பனை என்று பொருள்.இந்தியாவின் தலைசிறந்த விமான ஓட்டியும், தொழில் அதிபருமான ஜெ. ஆர். டி. டாடாவைப் பார்த்ததிலிருந்து கல்பனா சாவ்லாவிற்கு விமானம் ஓட்டும் ஆர்வம் ஏற்பட்டது.
கல்பனா சாவ்லா தனது கல்வியைக் கர்னலில் உள்ள தாகூர் அரசுப் பள்ளியில் தொடங்கினார். அவர் 1982 ஆம் ஆண்டில், சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் வான்வெளிப் பொறியியலில் தனது இளங்கலைப் பொறியியல் பட்டத்தைப் பெற்றார். அதே வருடம் அவர் அமெரிக்கா சென்றார். அர்லிங்க்டோனில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்திலிருந்து விண்வெளிப் பொறியியலில் முதுகலைப் பட்டத்தை 1984 ஆம் ஆண்டு பெற்றார். அதன் பின்னர் பௌல்தேரில் உள்ள கொலோரடோ பல்கலைக்கழகத்தில் 1986 இல் இரண்டாம் முதுகலைப் பட்டத்துடன், விண்வெளிப் பொறியியலில் முனைவர் பட்டத்தை 1988 ஆம் ஆண்டு பெற்றார்.
பின்னர் அதே வருடம் நாசா அமெஸ் ஆராய்ச்சி கூடத்தில் ஒசெர்செட் மேதொட்ஸ், இன்க். இல் துணைத் தலைவராகப் பொறுப்பேற்ற கல்பனா, செங்குத்தாகக் குறுகிய இடத்தில் புறப்படுதல் மற்றும் தரையிறங்கல் பற்றி CFD கம்ப்யுடேசினல் புலூயிட் டயினமிக்ஸ் (CFD) ஆராய்ச்சி செய்தார். விமானம் மற்றும் கிளைடேர்களை ஓட்டக் கற்றுக் கொடுக்க சாவ்லா தகுதிச் சான்றிதழ் பெற்றார். ஒன்று மற்றும் பல பொறிகள் பொருத்திய விமானங்கள், கடல் விமானங்கள் மற்றும் கிளைடேர்களையும் ஓட்ட அனுமதி பெற்று இருந்தார்


