வெளவால் தேசம் நாவலில் சோ.தர்மன் தாமிரபரணி புகழ் பாடியிருந்தார். அதைப்பற்றி பேசிக்கொண்டிருப்போம் . இனி தொடர்வோம்.
அப்படியானால் குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டனை
அனுபவிக்கத் தயாரா?’
‘குற்றமா எது குற்றம் *வீரபாண்டிய கட்டபொம்மனைப் புகழ்ந்து பாடியது’
‘கண் கொடுத்த தெய்வத்தை எப்படிய்யா மறக்க முடியும், புகழ்ந்து பாடாமல் இருக்க முடியும், நன்றி மறப்பது நல்ல தில்லையே, இந்தக் கண் அவர் கொடுத்த கண் அய்யாÕ
Ôஎன்ன கட்டபொம்மன், கண் கொடுத்தானா, புலவரே பொய் பேசாதீரும், துரைக்குத் தெரிந்தால், என்ன நடக்கும் என்று தெரியாது, உண்மையைப் பேசும். *
‘நான் சொல்வது சத்தியமான உண்மை. இடது கண் என் அப்பன் செந்தூர் முருகன் கொடுத்தது. வலது கண் என் அப்பன் வீரபாண்டிய கட்டபொம்மன் அருளால் ஜக்கம்மாள் தேவி கொடுத்தது. எதற்காக அய்யா நான் பொய் சொல்ல வேண்டும்..
‘கட்டபொம்மன் கண் கொடுத்ததாகவே இருக்கட்டும் புலவரே, அவனை இனிமேல் புகழ்ந்து பாடமாட்டேன் என்று மன்னிப்பு கேட்டுவிட்டுப் போரும். ‘
‘மன்னிப்பா, நான் என்ன குற்றம் செய்தேன் மன்னிப்புக் கேட்க.
‘கொஞ்சம் விட்டா கட்டபொம்மு பேசுன டயலாக் எல்லாத்தையும் துரை முன்னால பேசிருவீரு போல இருக்கே.
முத்தாலங்குறிச்சி, தாமிரபரணி நதி பாயும் கரையோரக் கிராமம். முப்போகம் விளையும் செழித்த நதி தீரம். கரையெங்கும் வளர்ந்து நிற்கும் வனாந்திரம். பல வகைப்பட்ட மரங்கள். எந்நேரமும் பறவைகளின் கெச்சட்டம். கரையை ஒட்டினாற்போல் படர்ந்த நாள்பட்ட வேப்பமரம். எப்போதும் கூட்டம் நிரம்பி வழியுமிடம். கந்தசாமிப் புலவரின் கம்பீரக் குரல். செந்தூர் முருகனைப் பற்றி; பொழுது விடியும் போதே புலவர் நதிக் கரைக்கு வந்துவிடுவார். இரண்டு கண்களும் பிறவியிலேயே குருடு ஆகையால் தனியே நதியில் இறங்கி குளிக்கமாட்டார். தினமும் யாராவது உதவி செய்வார்கள். குளித்து முழுகி ஈர வேஷ்டி சகிதம் கரையேறி நெற்றியில் மாதிரியே மேலெல்லாம் வரிவரியாய் பட்டை தீட்டி மரத்தடி வருவார்.
அப்புறம் சரஞ்சரமாய் வந்துகொண்டிருக்கும் பாடல்கள். யாருமே இல்லாவிட்டாலும்கூட தனியே பாடிக்கொண்டிருப்பார். கூடவே தான்தான் பெரிய முருக பக்தர். மற்ற எல்லோருமே தனக்குப் பிறகுதான் என்ற அகந்தையும் கூடவே வளர்ந்து கொண்டே வந்தது. ஒரு கட்டத்தில்தான் மட்டுமே முருக பக்தர். தனக்கு மட்டுமே முருகன் சொந்தம் என்ற பேரகத்தை அவர் நெஞ்சில் ஏறி உட்கார்ந்துகொண்டது. மாதம் தவறாமல் பௌர்ணமி அன்று புலவர் திருச்செந்தூர் கடலில் நீராடி முருகனைத் தரிசித்து இரவு அங்கே தங்கி காலையில்தான் ஊர்
வருவார். பல வருஷங்களாகத் தொடரும் இந்தப் பக்தியானது முருகன் எப்படியும் எனக்குக் கண்பார்வை கொடுப்பார் என்ற நம்பிக்கையை ஒருபுறமும், முருகனின் முதல் பக்தன் நானே, எனக்குப் பின்னர்தான் மற்ற பக்தர்கள் என்ற அகந்தையை மறுபுறமும் வளர்த்துக்கொண்டே வந்தார். புலவர் உள்ளுர்க்காரர் ஆகையால் மரத்தடியில் சில நேரம் மாமன் மச்சினர்களின் கூட்டமும் சேர்ந்துகொள்ளும். அந்த நேரம் கேலியும் கிண்டலும் கூடவே சிரிப்பாணியும் சேர்ந்து கொள்ளும். புலவர் ஒரு நாள்கூட கோபப்பட்டது கிடையாது.
எப்பப் பாத்தாலும் முருகனையே பாடிக்கிட்டு இருந்தா எப்பிடி மாப்ளே, வள்ளி, தெய்வானைனு முருகனுக்கு ரெண்டு பொண்டாட்டி அவங்களப் பத்தி ஒரு நாலு பாட்டு பாடலாம்ல்லே.”
வாங்க மாமா வாங்க, வள்ளியப்பத்தி பாட ஆசைதான் மாமா. ஓங்க தங்கச்சி பேரு வள்ளியம்மா. நான் அந்த வள்ளியப் பாட இந்த வள்ளி கேள்விப்பட்டு இங்க வந்து எங்கூட உட்காந்துக் கிட்டா ஒங்களுக்கு கேவலமில்லையா’
‘கேவலம் என்ன மாப்பிள்ளை கேவலம், வந்தா தாராளமா கூட்டிட்டுப் போயி வச்சு குடும்பம் நடத்தும், நாங்க என்ன வேண்டாம்னா சொல்றோம்’ ‘பெறகென்னைய்யா ரெண்டு பாட்ட வள்ளிமேல எடுத்து
விடும் ‘வேண்டாம்ய்யா,மாமா எப்படி தங்கச்சிய தள்ளி விட்றலாம்னு
பிளான் போடுறாரு, நம்ம மாட்டிக்கிறக் கூடாதில்ல கூட்டம் சத்தமாய் சிரிச்சு ஆர்ப்பரிக்கும். புலவரின் பாட்டு தொடரும். யார் யாரோ சொல்லிப் பார்த்தும் புலவர் பல வருடங்களாக பாட்டுப் பாடுவதை நிறுத்தவே இல்லை. பௌர்ணமி தவறாமல் கடல்முங்கி முருகனை வழிபடுவதையும் நிறுத்தவில்லை. பல மைல்கள் பார்வை தெரியாவிட்டாலும்கூட முருகன்மேல் கொண்ட பக்தி அவரை ஒவ்வொரு பௌர்ணமி யன்றும் கடலை நோக்கி இழுத்தது. கடலலைகளைப் போல் அவர் மனசில் அலையாடும் அகந்தை நான் ஒருவனே முதல் முருக பக்தன். என்னைப் போல் பக்தன் எவனுமில்லை. என்றைக்காவது ஒரு நாள் எம்பெருமான் முருகன் எனக்குக் கண்
கொடுப்பார். நான் முருகனை தரிசனம் பண்ணியே தீருவேன். பொங்கும் அலையைப் போல் புலவரின் நெஞ்சில் புயலாய் வீசியது இறுமாப்பு.
புலவரின் வேண்டுதலுக்கு முருகன் ஒரு நாள் செவி சாய்த்தான். கந்தசாமிப் புலவரின் கனவில் முருகன் காட்சி தந்தான். வருகிற பௌர்ணமிக்கு திருச்செந்தூர் வா. உமக்குக் கண்பார்வை கிடைக்கும், என்று சொல்லி மறைந்தான். மறுநாள் காலை புலவர் மிக உற்சாகமாகப் பாடிக்கொண்டிருந்தார். கண் கிடைக்கப் போகிறது என்ற சந்தோஷத்தில் கத்திய கத்தில் அவர் போட்டிருந்த வெற்றிலை எச்சில் செந்தூர் முருகனின் பரிவட்டத்தில் தெறித்து விட்டது. பூஜை செய்துகொண்டிருந்த பட்டர் பதறிப் போனார்.
‘அய்யோ… இது என்ன சோதனை, இங்கே பக்கத்தில் யாருமில்லை, நானோ வெற்றிலை போடுபவன் இல்லை, அப்படியிருக்க, முருகா… முருகா… பதறினார் பட்டர். பட்டரின் காதுகளில் அசரீரி ஒலித்தது.
‘பட்டரே பதற்றமடைய வேண்டாம். நாளை காலை இரு கண்களும் தெரியாத பிறவிக் குருடன் ஒருவன் சந்நிதிக்கு வருவான். அவனுக்குப் பார்வை கொடுக்க யாம் முடிவு செய்திருக் கிறோம். அதே சமயம் இந்த உலகத்திலேயே என்னைப் போன்ற பக்தன் இல்லவே இல்லை என்ற அவனுடைய இறுமாப்பையும் சோதிக்க உள்ளோம். ஆகவே அவனை சந்நிதிக்குள் அழைத்து வந்து, என் சிரசின் மேல் கிடக்கும் மாலையிலிருந்து ஒரு பூவை எடுத்து அவன் கண்ணில் ஒற்றி எடு. ஒரு கண் பார்வை தெரிந்து விடும். உடனே இன்னொரு கண்பார்வை எங்கே என்று கேட்பான். மறுகண் பார்வை வேண்டுமென்றால் பாஞ்சாலங் குறிச்சிக்குப் போய் வீரபாண்டிய கட்டபொம்மனைப் பார், இன்னொரு கண்பார்வை கிடைக்கும் என்று அசரீரி கூறியது. பட்டர் ஆச்சரியம் நீங்க வெகு நேரமாயிற்று.
(நதி வற்றாமல் ஓடும்)


