தாமிரபரணி ஆற்றங்கரையில் திருநெல்வேலி பேட்டைக்கு அருகே அமைந்துள்ளது சுத்தமல்லி கிராமம். இந்தக் கிராமத்திலிருந்து கார்த்திகா என்ற மாணவி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு தொல்லியல் முதுகலைப் பட்டம் படித்துவருகிறாள்.
இந்த மாணவி சுத்தமல்லி கிராமத்திற்கு அருகே பாறையில் நிறைய பாறை கிண்ணங்களைக் (cup marks) கண்டுபிடித்தாள். 25 பாறைக் கிண்ணங்கள் இக்கிராமத்தில் இங்கிருந்து கொண்டாநகரம் செல்லும் வழியில் அமைந்துள்ள அருள்மிகு வாழைக்காய் மாயாண்டி சுவாமி திருக்கோயிலிற்கு இடது புறம் சிறு பாறையில் உள்ளன எனவும்; மேலும் அங்குள்ள கல்வெட்டான் குழிக்கு அருகே உள்ள பாறையிலும் இரண்டு பாறை கிண்ணங்கள் காணப்படுகின்றன எனவும் கண்டறிந்தாள். இவ்விரண்டு பாறைகளும் கிட்டத்தட்ட 100 மீட்டர் இடைவெளியில் அமைந்துள்ளன.
வயல்களுக்கு நடுவே உள்ள வட்டப்பாறையில் நான்கு பாறைக் கிண்ணங்களையும் கண்டறிந்தாள்.
மேலும் இங்குள்ள தவணை கோவில் செல்லும் வழியில் உள்ள ஆக்கட்டாண் பாறைக்கு அருகில் உள்ள சிறு பாறையில் ஒரு பாறை கிண்ணம் கண்டறிந்தாள்.
பின்னர் தான் கண்டுபிடித்தப் பாறைக் கிண்ணங்களைப் பற்றித் தொல்லியல் பேராசிரியர்களிடம் இதைத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்லியல் துறை உதவிப் பேராசிரியர் மதிவாணன், முருகன்
மற்றும் துறைத் தலைவர் (பொறுப்பு) சுதாகர் ஆகியோர் பார்வையிட்டனர்.
அப்போது தொல்லியல் பேராசிரியர்கள் அந்தப் பகுதியில் 1800 ஆண்டுகள் பழமையான கருப்பு சிவப்பு, சிவப்பு பானை ஓடுகள் கண்டறியப் பட்டன. மேலும் 1800 முதல் 800 ஆண்டுகள் வரைத் தொடர்ச்சியான பயன்படுத்தப்பட்ட பானையோடுகளும் கிடைத்துள்ளன. இவை தொடர்ச்சியாக வரலாற்று சிறப்பு மிக்க ஊராக இவ்வூர் இருந்துள்ளதை உணர்த்துகிறது எனவும்; இந்தப் பாறைகளில் காணப்படுகிற பாறைக் கிண்ணங்களும் இந்தக் காலத்தைச் சார்ந்தவைகளாக இருக்கவே வாய்ப்புள்ளன எனவும் தெரிவித்தனர்.
இது மாதிரியான பாறைக் கிண்ணங்கள் ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் வசவப்பபுரம் போன்ற மிகப் பழமையான இடங்களிலும் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளன. இந்தப் பாறைக் கிண்ணங்கள் அமைந்துள்ள இடங்கள் முதுமக்கள் தாழிகள் நிறைந்து காணப்படுகின்றன. எனவே “அக்கால மக்கள் மறைந்த தன் முன்னோர்களை நினைத்து எண்ணெய் ஊற்றித் தீபம் போட்ட இந்த இந்தப் பாறைக் கிண்ணங்களை அமைந்திருக்கலாமோ?” என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
மேலும் சமணர் படுக்கைகள் காணப்படும் மருகால்தலை மற்றும் அய்யனார்குளம் குன்றுகளிலிலும் பாறைக் கிண்ணங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இந்தப் பாறை கிண்ணங்கள், பாறைகளில் மூலிகைகளை வைத்து அரைத்து மருந்து தயாரிக்கும்போது ஏற்பட்டதாக இருக்குமோ?” எனச் சிந்திக்கத் தூண்டுகிறது. இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க இந்தப் பாறைக் கிண்ணங்களைப் பற்றி மேலும் தொடர்ந்து ஆராய்ச்சி செய்ய வேண்டும்.
இவை சுத்தமல்லியில் இருந்து
நான்கு கிலோமீட்டர் சுற்றளவில்
இந்த மாணவி தனது வகுப்பு மாணவ மாணவியர்களுடன் ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட பாறைக் கிண்ணங்களைக் கண்டறிந்துள்ளாள்.
.
இந்த நிலையில் சுத்தமல்லி கிராமப் பகுதிகளில் மாணவி கார்த்திகா கண்டறியப்டுள்ள பாறை கிண்ணங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.


