செய்துங்கநல்லூரில் உள்ள கருங்குளம் ஒன்றிய அலுவலகத்தில் வைத்து துப்புறவு பணியாளர்கள் மற்றும் ஓ.எச் ஆபரேட்டர்களுககு அமைச்சர் கடம்பூர் ராஜி இலவச உணவு பொருள்களை வழங்கினார்.
கொரோனாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு சார்பில் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்கள். செய்துங்கநல்லூரில் உள்ள கருங்குளம் ஒன்றிய அலுவலகத்தில் வைத்து துப்புறவு பணியாளர்கள் மற்றும் ஓ.எச். ஆபரேட்டர்கள் 130 பேருக்கு அமைச்சர்கடம்பூர் ராஜி இலவச அரிசி மற்றும் உணவுபொருள்கள் வழங்கினர். மாவட்ட ஆட்சி தலைவர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சண்முகநாதன் , கருங்குளம் சேர்மன்கோமதி ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருங்குளம் ஒன்றிய ஆணையாளர் சுப்பு லெட்சுமி, கூடுதல் ஆணையாளர் வெங்கிடாசலம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


