நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி 8 ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு சிறந்த தாலூகா செய்தியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுடலை மணிச்செல்வனை பொருநை ஆதிச்சநல்லூர் தொல்லியல் கழகம் சார்பில் செயலாளர் உதவி பேராசிரியர் ஜோசப் ராஜ் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தனர்.அருகில் கழக நிறுவனர் மற்றும் தலைவர் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, பொருளாளர் கிராம நிர்வாக அதிகாரி கந்தசுப்பு, துணைத்தலைவர் வள்ளி உள்படப் பலர் கலந்துகொண்டனர்.


