வல்லநாடு அருகே நாணல்காட்டில் கொரோனா நோய்தீர இடை க்காடர் மற்றும் ஆமை தீபம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
தென் நள்ளாறு என போற்றப்படுவது நாணல்காடு திருகண்டீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயம் கும்பாபிசேகம் கண்டு பல நாள்களாகி விட்டது. இந்த ஆலயத்தில் கும்பாபிசேகம் நடைபெற பல்வேறு பணிகளை ஊர்மக்கள் மற்றும் திருப்பணி கமிட்டியினர் செய்து வருகின்றனர். இதற்கிடையில் இந்த சிவனை இடைக்காடர் சித்தர் வணங்கினார் என்ற ஐதீகமும் உண்டு.
இதற்கிடையில் பச்சைவேஷ்டி சாமி சடையாண்டி சித்தர் என்பவர் இந்த பகுதியில் இடைக்காடர் சித்தரை பிரதிஷ்டை செய்து, எதிரில் ஆமை உருவத்தின் மீது தீபம் போட்டால் , சிவன் கோயில் கும்பாபிசேக பணி நடைபெற்று, தீராத தொற்று நோயான கொரேனா நோய் தீரும் என ஆவல் கொண்டார். இதற்காக நாணல்காடு பஞ்சாயத்து தலைவர் இசக்கி முத்து மற்றும் பொதுமக்களுடன் ஆலோசனை செய்தார். அதன் படி 29.06.2020 அன்று சிலை பிரதிஷ்டை மற்றும் தீப பிரதிஷ்டை நடந்தது.
இதையட்டி அதிகாலையில் சிறப்பு ஆரதானைகள், அபிசேகம் அலங்கார தீபாரதனை நடந்தது. ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் சமூக இடைவெளி விட்டு மக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து பச்சை வேஷ்டி சாமி சடையாண்டி சித்தர் கூறும் போது, தாமிரபரணி ஆற்றங்கரையில் பட்டு போன அரசமரத்தடியில் இயற்கனவே இடைக்காடர் சித்தர் பீடம் இருந்துள்ளது . அது நாளடைவில் மங்கி போய் விட்டது. தற்போது இந்த மரம் துளிர் விட்டுள்ளது. சில குறிப்புகளின் படி இந்த இடத்தில் இடைகாடர் சித்தர் பிரதிஷ்டை செய்து. ஆமை விளக்கு போட்டால் இந்த கோயிலுக்கு கும்பாபிசேகம் நடைபெறும். மேலும் கொரோனா நோய் தீர விளக்கு பூஜைதான் சிறப்பானது எனவே தான் இந்த ஆமை விளக்கு ஏற்றிவைத்துள்ளோம். விரைவில் நோய் தீர ஈசன்அருள் புரிவான் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் அனுமன் பக்தர் கேபி மாறன், நாணல்காடு பஞ்சாயத்து தலைவர் இசக்கி முத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.