செய்துங்கநல்லூரில் கடந்த ஒரு வாரம் முன் ஊரடங்கை முன்னிட்டு, அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது. அதன் பின் இன்று மீண்டும் கடை திறக்கப்பட்டது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் ஜீன் 30 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் செய்துங்கநல்லூரில் மீன் விற்பனை செய்தவர், டெய்லர் என பரவலாக கொரோனா தொற்று பரவ ஆரம்பித்து விட்டது.
இதன் காரணமாக கடந்த 20 ந்தேதி செய்துங்கநல்லூர் காவல்நிலையத்தில் வைத்து ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் சந்திரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. துணை தாசில்தார் சங்கரநாரயணன், சப்- இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணி, தேவி, சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் இசக்கி பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தார். அந்த கூட்டத்தில் செய்துங்கநல்லூர் கிராம நிர்வாக இயக்குனர் சந்தனகுமார், முத்தாலங்குறிச்சி கிராம நிர்வாக அதிகாரி கந்த சுப்பு, செய்துங்கநல்லூர் வியாபாரிகள் சங்கத்தினர் தலைவர் அய்யாக்குட்டி, பொறுளாளர் பால்சாமி, பஞ்சாயத்து உறுப்பினர் பட்டுதுரை, சுவீட் கணேசன், டேவிட் செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து கிளார்’ சங்கரபாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர். பேச்சுவார்த்தை திங்கள் கிழமை 22 ந்தேதி முதல் தொடர்ந்து 1 வாரத்துக்கு முழு கடை அடைப்பு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதன்படி 21 ந்தேதி ஞாயிற்று கிழமை மக்கள் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கிக்கொள்ள வேண்டும் என்றும் தொடர்ந்து திங்கள் கிழமையில் இருந்து முழ கடையடைப்பு நடத்த ஒத்துழைப்புதரவேண்டும் என்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதற்கிடையில் கடந்த 1 வாரம் செய்துங்கநல்லூரில் மெடிக்கல் மற்றும் பால் கடையை தவிர மற்ற கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து இன்று 29 ந்தேதி மீண்டும் கடை திறக்கப்பட்டது.
அனைத்து கடை வியாபாரிகளும் ஒத்துழைப்புகொடுத்த வகைக்கு செய்துங்கநல்லூர் தொழில் வர்த்தகர் சங்க தலைவர் அய்யா குட்டி, செயலாளர் பிச்சைபூபாலராயன், பொருளாளர் பால்சாமி உள்பட சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.