செய்துங்கநல்லூர் அருகே உள்ள கருங்குளம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 28.). இவர் டீ மாஸ்டராக உள்ளார். இவருக்கு மூலைக்கரைப்பட்டியில் திருமணம் ஆகி உள்ளது. ஊரடங்கு உத்தரவால் தனது மனைவி கோமு , மூத்த மகன் ஆகாஷ் ஆகியோரை நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் மூலக்கரைப்பட்டியில் மனைவி வீட்டில் விட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் சரிந்து விழுந்தது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ராமகிருஷ்ணனை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ராமகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மூலக்கரைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.