தூத்துக்குடி மாவட்டம் கால்வாய் கிராமத்தில் பரணி தமிழர் அறக்கட்டளையின் சார்பில் புத்தாண்டை முன்னிட்டு 100 மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.
கால்வாய் கிராமம் கோவைகுளம் கரையில் உள்ள கோவலம் இசக்கியம்மன் கோயில் அருகில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை தலைவர் பரமசிவன் என்ற சிவா தலைமை வகித்தார். செயலாளர் அழகிய நம்பி, பொருளாளர் தில்லை நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து கால்வாய் கிராமத்தில் உள்ள அனைத்து குளங்கள் கரையிலும் சுமார் 1000 மரக்கன்று நடவேண்டும் என திட்டமிடப்பட்டது. முதல் கட்டமாக 100 கன்று களை நட்டனர். இந்த நிகழ்ச்சியில் கௌரவ ஆலோசகர்கள் அருணாசலம், வெயிலு கந்தப்பிள்ளை, ஆறுமுகம், துணைத்தலைவர்கள் மூக்கையா, இசக்கித் தேவர், துணை செயலாளர்கள் திருமலை நம்பி, செல்வம், இணைச்செயலாளர்கள் மாரிமுத்து, , மாரியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.