செய்துங்கநல்லூர் அய்யானர்குளம் பட்டியில் மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி மன்றம் சார்பில் மழை வேண்டி கஞ்சி கலைய ஊர்வலம் நடந்தது. அய்யனார்குளம் பட்டி மன்றத்தில் இருந்து துவங்கிய இந்த ஊர்வலத்துக்கு மன்ற தலைவர் வண்டி மலையான் தலைமை வகித்தார். துணை தலைவர் மல்லிகா, செயலாளர் மாடத்தி, பொருளாளர் சண்முக வடிவு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஊர்வலம் வண்டி மலையான் கோயில், நம்பி சாமி கோயில் ,அம்மன் கோயில் வழியாக ஊர் சுற்றி வந்து மீண்டும் மன்றத்தினை அடைந்தது. தொடர்ந்து மழை வேண்டி பிராத்தனை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை அய்யானர்குளம் பட்டி மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி மன்றம் ஏற்பாடு செய்திருந்தது.
.