முத்தாலங்குறிச்சி குணா தசரா குழுவினர் முளைப்பாரி எடுத்து ஊர்வலம் வந்தனர். முத்தாலங்குறிச்சியில் கடந்த 5 வருட காலமாக குணா தசரா குழுவினை உருவாக்கி அவர்கள் குழுவினராக இணைந்து. குலசேகர பட்டிணம் சென்று வந்தனர். கடந்த இரண்டு ஆண்டு கொரோனா காலத்தினால் உள்ளூரில் உள்ள ஸ்ரீ குணவதி அம்மன் கோயில் அருகே கப்பம் கட்டி 41 நாள் விரதம் இருந்து அம்மனை வணங்கி வந்தனர். இந்த ஆண்டும் அதேபோல் பக்தர்கள் காப்புக் கட்டி கோயில் வளாகத்தில் குடில் அமைத்து அம்மனை வணங்கி வந்தனர். கடந்த 11 நாள்கள் குணவதி அம்மன் கோயிலில் அம்மன் கொலுவிருந்தார். இதனால் அம்மன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் காட்சி தந்தார். இன்று இறுதிநாளில் பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊர் வலம் வந்தனர். அம்மன் கோயில் வளாகத்திலிருந்து கிளம்பிய இந்த ஊர்வலம் அனைத்து தெருக்களையும் சுற்றி இறுதியாகத் தாமிரபரணி ஆற்றில் முளைப்பாரியைக் கரைத்தனர். அதன் பின் அன்னதானம் நடந்தது. இரவில் காப்புக் கட்டு அவிழ்க்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை முத்துக்குட்டி, வள்ளி நாதன், பலவேசம் உள்படத் தசரா குழுவைச் சேர்ந்த குருசாமிகள் நடத்தினர்.


