எனது தந்தை பாதையில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற வளர்ச்சிக்கு பாடுபடுவேன். ஸ்ரீவைகுண்டத்தில் வாக்கு சேகரிப்பின் போது காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் பேச்சு.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக ஸ்ரீவைகுண்டம் மெயின் பஜாரில் திறந்தவெளி வாகனத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் எனது தந்தை எப்படி இந்த பகுதியில் இருந்து கொண்டு ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியின் வளர்ச்சிப் பணிக்காக பாடுபட்டாரோ அதே போல் நானும் பாடுபடுவேன் என பிரச்சாரத்தின் போது பேசினார். அப்போது அவருக்கு ஊர் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் சிறப்பாக வரவேற்பளித்தனர். இந்த நிகழ்ச்சியின்போது தேர்தல் செலவின பிரிவு அதிகாரி சுல்தான் சலாவுதீன் தலைமையிலான காவல்துறையினர் பலர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள இசவன்குளத்தில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ். விவசாயத்திற்காக பாலங்கள் சீரமைத்து தருவதாக உறுதி அளித்தார்.