
கிராமபுறங்கள் அனைத்திற்கும் பேருந்து வசதி ஏற்படுத்தி தரப்படும். ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஸ்ரீமூலக்கரை கிராமத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் உறுதி.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6 ம் தேதி நடைபெற உள்ளது. இதன் காரணமாக அனைத்து வேட்பாளர்களும் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக ஊர்வசி அமிர்தராஜ் போட்டியிடுகிறார். அவர் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் இன்று ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஸ்ரீமூலக்கரை கிராமத்தில் பொதுமக்களிடம் திறந்த வேனில் நின்றபடி வாக்குகள் சேகரித்தார்.
அதன்பின்னர் அவர் பேசுகையில், கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் 50 ஆண்டுகாலம் பின்னோக்கி சென்று விட்டது. பெட்ரோல், டீசல், கேஸ் விலை ஏறிக்கொண்டே செல்கிறது. மேலும் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் நான் வெற்றி பெற்றால் கிராமபுறங்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தருவேன் என்றும் மேலும் நிறைவு பெறாமல் கிடக்கும் பணிகளை அனைத்தையும் உடனே நிறைவேற்றி தருவேன் என்றும் அவர் பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்தார்.