தேசிய காசநோயகற்றும் திட்டம் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு காசநோய் பிரிவிற்கு உட்பட்ட கருங்குளம் பகுதிகளில் காசநோயகற்றும் திட்டப் பணிகள் குறித்த ஆய்வு துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் டாக்டர்.க.சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
கருங்குளம் பகுதிகளில் காசநோயால் பாதிக்கப்பட்டு படுக்கை நிலையில் உள்ள நோயாளியின் வீட்டிற்கே சென்று சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் மற்றும் ஆலோசனைகளை டாக்டர்.க.சுந்தரலிங்கம் வழங்கினார்.
இந்த ஆய்வில் மாவட்ட தீர்வு முறை அமைப்பாளர் *திரு.குப்புசாமி*, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் *திரு.சந்தானசங்கர்வேல்*, வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் *திரு.அ.அப்துல் ரஹீம் ஹீரா* ஆகியோர்கள் உடன் இருந்தார்கள்.
ஏற்பாடுகளை *வல்லநாடு காசநோய் பிரிவு* செய்திருந்தது.