செய்துங்கநல்லூரில் சின்ன கலைவாணர் நடிகர் விவேக் மறைவையட்டி மருதூர் மேலக்கால் கரையில் அவரது வயதையட்டி 59 மரக்கன்றுகளை நடப்பட்டது. பஞ்சாயத்து தலைவர் பார்வ்தி நாதன் தலைமை வகித்தார். வழக்கறிஞர் தில்லை, சமூக சேவகர் சுடலைமுத்து, கதிரேசன், ராஜிபாண்டியன், கார்த்திக், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாதா டிராவல்ஸ் திருச்செல்வம், சோமசுந்தரம் என்ற குட்டி , எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்பட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து சின்ன கலைவாணரின் ஆசையை பூர்த்தி செய்ய தொடர்ந்து மரக்கன்று நட வேண்டும் என உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.


