
தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்டஆட்சி தலைவர் மரு.கி. செந்தில்ராஜ் தூத்துக்குடி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டி பல்வேறு பிரச்சாரங்களை செய்து வருகிறார். இதில் செயலி மூலமாக மாற்று திறனாளிகள் வாக்களிக்க வேண்டி விழிப்புணர்வு படத்தினை கடந்த மாதம் வெளியிட்டார். அதை தொடர்ந்து பணம் வாங்கி கொண்டு வாக்களிக்க கூடாது என ஈடாகுமா என்ற ஒரு விழிப்புணர்வு படத்தினையும் வெளியிட்டார். இந்த படங்கள் மக்கள் தொடர்ப்பு அதிகாரி மூலமாக மாவட்டம் முழுவதும் பிரச்சார வேனில் திரையிடப்பட்டு வருகிறது. இதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் வாருங்கள் வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு படத்தினை இன்று வெளியிட்டார். இதில் வயது முதிர்ந்த வாக்காளர்கள் எப்படி வாக்களிக்கிறார்கள் உள்பட பல 10 கேள்விகள் கேட்கப்பட்டு, அந்த கேள்விகளுக்கு சுமார் 18 பேர் பதில் சொல்வது போன்று படப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை கா.அபிஷ்விக்னேஷ் இயக்கியுள்ளார். இதன் வெளியிட்டு விழா இன்று காலை 10 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் வைத்து நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்டஆட்சி தலைவர் மரு.கி. செந்தில்ராஜ் வெளியிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் பெற்று கொண்டார். இந்த நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரித்திவி ராஜ், துணை ஆட்சியர்(பயிற்சி) சதீஷ்குமார், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன்,எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, பட இயக்குனர் அபிஷ்விக்னேஷ், துணை இயக்குனர் கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் இருந்தனர்.