மருதூர் அணையில் சிறுவனை தேடும் பணி தொடர்ந்து 5 வது நாளாக நடைபெறுகிறது. நேற்று விஜயநாரயணம் கட்டபொம்மன் கடற்படை வீரர்கள் மருதூர் அணைக்கட்டு பகுதியில் தேடுதல் வேட்டையை துவங்கியுள்ளனர்.
கலியாவூர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் பார்த்திபன்( வயது8). இவன் கடந்த 11 ந்தேதி தன் தந்தையுடன் மருதூர் அணையில் தெப்பி விழும் வெள்ளத்தினை பார்க்க சென்ற போது தவறிவிழுந்து விட்டான். அ வனை தாமிரபரணி தண்ணீர் அடித்து சென்று விட்டது. சிறுவனின் கதி என்பது இதுவரை தெரியவில்லை. இந்த இடத்துக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் செந்தில் ராஜ், தூத்துக்குடி மாவடட கண்காணணிப்பு அதிகாரி ஜெயயக்குமார், சப் கலெக்டர் சிம்£ன் ஜித் சிங் ஹாலோன் மற்றும் அதிகாரிகள் வந்த பார்வையிட்டனர். சம்பவ இடத்தில் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் தலைமையில் பல்வேறு விதத்தில் சிறுவனை தேடும் பணி நடந்து வருகிறது. தொடர்ந்து தண்ணீர் பெருக்கு ஆற்றில் அதிகரித்த காரணத்தினால் தேடுதல் பணி தமாதமானது.
5 வது நாளான நேற்று தாமிரபரணியில் தண்ணீர் வரத்து குறைந்தது. எனவே மாவட்ட ஆட்சி தலைவர் செந்தில் ராஜ் உத்தரவின் பேரில் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் தலைமையில் விஜயநாயரணம் கட்டபொம்மன் கடற்படை குழுவினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர். இதில் 10 பேர் கொண்ட குழுவினர் மோட்டார் மிதவை படகில் காலை 10 மணிக்கு கிளம்பினர். அணைக்கட்டில் கீழ் பகுதியில் இருந்து முறப்பநாடு தடுப்பணை வரை தேடிவிட்டு , மீண்டும் மற்றுமொரு வழியாக மருதூர் அணைக்கட்டை அடைந்தனர். மதியத்திற்கு பிறகு மருதூர் அணையில் மண்டிக்கிடக்கும் புதர் பகுதியில் இவர்களது தேடுதல் வேட்டை நடந்தது. அப்போது வல்லநாடு வருவாய் ஆய்வாளர் மாசன மணி, கிராம நிர்வாக அலுவலர் முத்துகுமார், கலியாவூர் பஞ்சாயத்து தலைவர் சின்னசாமி, துணைத்தலைவர் பரமசிவம் உள்பட தன்னார்வ தொண்டர்கள் உடன் இருந்தனர்.
அணைக்கட்டில் தவறிய சிறுவன் பார்த்திபன் வீடடுக்கு ஆறுதல் கூற கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன் வருகை தந்தார். அவர் பார்த்தீபனின் தயார் மற்றும் உறவினர்களிடம் ஆறுதல் கூறினார். அதன்பின் உதவி தொகை வழங்கினார். அவருடன் கலியாவூர் பஞ்சாயத்து தலைவர் சின்னசாமி உடனிருந்தார்.
தொடர்ந்து 5 வது நாள்தேடுதல் வேட்டை நடத்தியும், சிறுவன் கிடைக்காதது இந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.