செய்துங்கநல்லூர் நூலகத்தில் மறைந்த நூலகர் துரைராஜ் படத்திறப்பு விழா , மரக்கன்று நடும்விழா, வல்லநாடு சித்த மருத்துவர் டாக்டர் செல்வகுமார் ஆகியோருக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. வாசகர் வட்ட தலைவர் திருமலை நம்பி தலைமை வகித்தார். துணை தலைவர் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட எழுத்தாளர் நாறும்பூ நாதர் மறைந்த நூலகர் துரைராஜ் படத்தினை திறந்து வைத்து , மரக்கன்று நட்டார். அதன் பின் டாக்டர் செல்வகுமாருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்தினார். கோபால் உள்பட பலர் பேசினர். இந்த நிகழ்ச்சியில் முத்தாலங்குறிச்சி கிராம நிர்வாக அதிகாரி கந்தசுப்பு, ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் அதிகாரி முத்துசுவாமி, ஓய்வு பெற்ற தபால் காரர் செல்லப்பா, வட்டார சுகாதர ஆய்வாளர் பெரியசாமி, சுகாதர அலுவலர் சண்முகபெருமாள் , மணி, ஆசிரியை பாலசரஸ்வதி துரைராஜ் குடும்பத்தினர் உள்பட பலர் கலந்துகொண்டனர். நூலகர் லெட்சுமணன் நன்றி கூறினார்.


