வல்லநாடு பகுதியில் மீண்டும் ஒரு வாய்ப்பு தாருங்கள் என சுந்தராஜன் உருக்கமாக மக்களிடம் பேசி வாக்குசேகரித்தார்.
அமமுக ஒட்டப்பிடாரம் வேட்பாளர் சுந்தரராஜன் கருங்குளம் ஒன்றிய பகுதியில் வாக்கு சேகரித்தார். அவர் வல்லநாடு, ஈச்சந்தா ஓடை, சேதுராமலிங்க புரம், நாணல்காட்டான் குளம், கோனார்குளம் உள்பட பல பகுதியில் பிரச்சாரம் செய்தார். அவர் வீடு வீடாக சென்ற வாக்குசேகரித்தார். அவர் பேசும் போது கூறியதாவது. இந்த பகுதியில் உள்ள சாலைகளை சீர் செய்யவும், குக்கிராமத்தில் உள்ள அனைத்து தெருக்களை சீர்படுத்தவும் நடவடிக்கை எடுதது வந்தேன். அதற்குள் எம்.எல்.ஏ பதவியை பறித்துவிட்டார்கள். மக்கள் சேவை செய்ய வந்த என்னை பழி வாங்கி கைகளை கட்டி போட்ட காரணத்தினால் எதுவும் செய்ய முடியாமல் போய் விட்டது. இந்த தேர்தலில் எனக்கு வாய்ப்பு தாருங்கள். நான் விட்ட பணிகளை துவக்க ஆணையிடுங்கள் என்று அவர் பேசினார்.
அவருடன் கருங்குளம் ஒன்றிய செலயாளர் சிவசுப்பிரமணியன், கொம்பையா, டாக்டர் கோசல்ராம் மாநில அண்ணா தொழில் சங்கபேரவை பொருளாளர் நெல்லை பரமசிவன், கோட்டபொறுப்பாளர் பொன்னுசாமி, ஆவின் அண்ணாசாமி, மண்டல பொறுப்பாளர் பொன்னையா, சரவணன் உள்பட பலர் உடன் வந்தனர்.