தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவக் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் செய்துங்கநல்லூர் கிளை
இணைந்து குரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கத்தோடு மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் *ஆர்கானிக் ஆல்பம் 30C* எனும் மருந்தினை 500 நபர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் துண்டு பிரசுரம் வழங்கி மக்களுக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டது.
தவ்ஹீத் ஜமாத் கிளை துணை செயலளார் கரீம் பாஷா தலைமை வகித்தார். பொருளாளர் அப்துல் கனி வரவேற்றார். வள்ளுவர் சுற்று சூழல் பாதுகாப்பு நுகர்வோர் அறகட்டளை கணேசன் அறிமுக உரையாற்றினார். ஹோமியாபதி மருந்து இலவசமாக வழங்கப்பட்டது. நெல்லை மாவட்ட ஹோமியோபதி மருத்துவர் சங்க தலைவர் டாக்டர் துரைராஜ் மருந்துகளை வழங்கினார். ரெட்கிராஸ் சொக்கலிங்கம், அப்துல்காதர், ஜபர் அலி, ஹம்சா, மைதீன், அல்தாப், அர்சத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.