தூத்துக்குடி மாவட்டத்தில் திருவைகுண்டம் தாலுகா உட்பட 150 மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சார்பில் நலத்திட்டம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாற்றுத்திறனாளி நல அலுவலர் பிரமநாயகம் தலைமை வகித்தார். சாத்தான்குளம் பிசியோதெரபி மருத்துவர் லட்சுமி, துணை வட்டாட்சியர் சங்கரநாராயணன். வருவாய் ஆய்வாளர் சங்கர வடிவு. கிராம நிர்வாக அலுவலர்கள் விக்னேஷ்வர். கமல்ராஜ். பஞ்சாயத்து தலைவர்கள் மணக்கரை. அருணாசலவடிவு சீனிபாண்டியன், ஆறாம்பண்ணை, சேக் அப்துல் காதர், தன்னார்வலர் ராஜமான உள்பட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சாத்தான்குளம் மானா உதவும் கரங்கள், மணக்கரை, ஆறாம்பண்ணை, பஞ்சாயத்து தலைவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு பழங்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.