செய்துங்கநல்லூரில் பொது கழிப்பிடம் அமைக்க வேண்டும் என சத்துணவு சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருங்குளம் வட்டார தமிழ் நாடு சத்துணவு ஊழியர் சங்க 4 வது வட்டாரப் பேரரவை கூட்டம் செய்துங்கநல்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வைத்து நடந்தது.
வட்டாரத்தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடாசலம், பாலசுப்பிரமணியன், சத்துணவு ஊழியர் சங்க வட்டாரத் துணைத்தலைவர் உமாபகவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார இணைச்செயலாளர் பண்டாரம் வரவேற்றார். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினை சேர்ந்த முத்து சாமி துவக்கவுரையாற்றினார். வட்டார செயலாளர் வேல் முருகன், பொருளாளர் காசிமணி ஆகியோர் அறிக்கை வாசித்தனர். நிறைவுரையில் அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் மகேந்திரபிரபு, ஓய்புபெற்ற சத்துணவு ஊழியர் சங்க சுப்பிமணியன், மாவட்ட துணை தலைவர் துரைப்பாண்டியன், மாவட்ட செயலாளர் தமிழரசன் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் செய்துங்கநல்லூரில் 25 வருட கோரிக்கையான பொது கழிவறை அல்லது கட்டண கழிவறை அமைக்க வேண்டும். சத்துணவு திட்டத்தில் பணிபுரியும் சமையலர் , உதவியாளர் அமைப்பாளர்களுக்கு முறையான வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும், ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு வரையறுக் கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப தகுதியுள்ள சத்துணவு அமைப்பாளர்களை அரசு காலி பணியிடத்தில் நிரப்பிட வேண்டும், உயிரிழந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு ஆண், பெண் என பாராமல் வாரிசு வேலை வழங்கிட வேண்டும் என்பது உள்படபல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
வட்டார இணைச்செயலாளர் தஸ் நேவிஸ் நன்றி கூறினார்.