தாமிரபரணி ஆற்றங்கரையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல இடங்களில் இருந்தும் தண்ணீர் தாமிரபரணியில் வந்து சேருகிறது. இதனால் தூத்துக்குடி மாவட்ட எல்கையில் உள்ள தாமிரபரணியின் மிக நீளமான தடுப்பு அணையான மருதூர் அணை நிரம்பி வழிகிறது. இதனால் 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் மருதூர் அணையை தாண்டி விழுகிறது. இந்த காட்சி கண்கொள்ளா காட்சியாகும். ஆனாலும் தண்ணீரின் ஆபத்து தெரியாமல் பலர் இங்கு குளித்து வருகின்றனர்.