ஸ்ரீவைகுண்டம் மிகவும் பிரசித்தி பெற்ற புனித சந்தியாகப்பர் கோயில் திருவிழா தேர்பவனி நடந்தது. திரளானோர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி நதியின் கரையோரத்தில் அமைந்துள்ள புனித சந்தியாகப்பர் கோயில் திருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இயேசுவின் 12 சீடர்களின் ஒருவரான புனித சந்தியாகப்பருக்கு ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி நதிக்கரையில் 415 ஆண்டுகளுக்கு முன்பு கோயில் கட்டப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜீலை 16ம்தேதி முதல் 25தேதி வரை நடைபெறும்.
அதே போல் இந்த ஆண்டும் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் போது தினமும் திருப்பலி நடந்தது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேர்பவனி திருவிழா இன்று காலை நடந்தது. காலை 10 மணி அளவில் கோவில் முன்பு புனித சந்தியாகப்பர் தேரில் பவனி வந்தார். அப்போது பொதுமக்கள் புனித சந்தியாகப்பரை வாழ்த்தி பாடி தேரை இழுத்தனர். அதன்பின் திருப்பலியும் நடந்தது. இந்த திருவிழாவில் பெரியதாழை, உவரி, மணப்பாடு, ஆலந்தலை, படுக்கப்பத்து, இடிந்தகரை, தூத்துக்குடி, அமலிபுரம், கடலோர மீனவமக்கள் அதிகளவில் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பிசகாயஜோஸ் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.


