தேரிக்காடு பகுதியில் விநாயகர் போன்று தோற்றமளித்த மேக கூட்டத்தை பார்த்து பொதுமக்கள் பரவசம் அடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள தஞ்சை நகரம் பகுதியானது முழுவதும் செக்க சிவந்த செம்மண் தேரி பகுதியாக காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் திடீரென வானத்தில் விநாயகர் போன்ற மேகம் ஒன்று தென்படுவதாக கூறி அதனை நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். மேலும் அந்த வானம் ஆனது பார்ப்பதற்கு விநாயகர் போன்ற தோற்றத்தில் இருந்ததாகவும் கூறி வாகனங்களை நிறுத்தி அதனை பார்த்து பரவசமடைந்தனர். மேலும் இந்த விநாயகர் போன்ற தோற்றத்தை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து இணையத்தில் பரப்பியதால் தற்போது அது வைரலாகி வருகிறது.


