வட வல்லநாட்டில் நுண்ணீர் பாசன விழிப்புணர்வு முகாம் நடந்தது. வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் தலைமை வகித்தார்.
வேளாண்மை அலுவலர் கனகராஜ் முன்னிலை வகித்தார். நுண்ணீர் பாசனத்தின் அவசியம் குறித்தும், தென்னை, பருத்தி, வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கு மானிய நிலையில் நுண்ணீர் பாசனம் அமைப்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. வல்லநாடு வருவாய் ஆய்வாளர் மைக்கேல் சார்லஸ் ராஜா உள்பட பலர் பேசினர். மானியத்திற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது. உதவி தொழில் நுட்ப மேலாளர் ரத்தினம் பால் நன்றி கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் நூர்தீன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.


