செய்துங்கநல்லூரை சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு தாமிரபரணி ஆற்றில் மிகப்பெரிய அணையாக மருதூர் அணை உள்ளது. சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அணை. 4000 அடி நீளம் கொண்டது. இந்த அணைப்பகுதியில் இருந்து ஏராளமான கல்வெட்டு கள் கண்டறியப்பட்டன. இவை 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. பழங்கால கட்டுமானத்தின் அடையாளமாக உள்ள மருதூர் அணையை பாதுகாக்க வேண்டியது அவசியம். இங்கு அறிவியல் பூர்வமாக தொல்லியல ஆயவு செய்தால் பழங்கால வாழ்வியலை வெளிக்கொண்டு வர முடியும். எனவே மருதூர் அணைப்பகுதியில் அறிவியல் பூர்வமான தொல்லியல் அகழாய்வு மேற்கொள்ளுமாறு உத்தரவிட வேண்டும்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என். கிருபாகரன். பி.புகழேந்தி ஆகியோர் மனு குறித்து மத்திய மாநில அரசுகளில் தொல்லியல் துறை முதன்மை செயலர்கள், தொல்லியல் கண்காணிப்பாளர் தூத்துக்குடி கலெக்டர் ஆகியோர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.


