பெருந்தலைவர் காமராசர் அவர்கள் ஒரு முறை செய்துங்கநல்லூர் வந்திருந்தார்.
அவரைக் காண வந்திருந்த பெருந்திரளான மக்கள் கூட்டத்தில், ஒரு பெரியவர் முண்டியடித்து காமராசரை நோக்கி வந்து கொண்டிருந்தார், கையில் ஒரு சிறுவனின் கரத்தையும் இறுகப் பிடித்த படியே ….
சிறுவனோடு ஓரு பெரியவர் தன்னை நோக்கி வருவதை கவனித்த காரமாசர், தன்னை நோக்கி வரும் படி அழைத்தார்.
கூட்டம் உடனே வழி விட்டது.
பெரிய நெரிசலிருந்து
விடுபட்ட பெரியவர் காமராசர் அருகில் சென்று,
சிறுவனை காண்பித்து,
“ஐயா, இவன் எம் பையன். இவனுக்கு உங்க பேருதான்யா வைச்சிருக்கேன் …
பெரியவர் உற்சாகத்துடன் சொன்னவுடன் காமராசர்
சிறுவனை உற்றுப் பார்த்து விட்டு சொன்னார்
“பேரு வைச்சா மட்டும் போதாது, சாதிச்சு காட்டனும். புரியுதா?
சிறுவன் தலையாட்டினான்.
அந்த ஒரு சொல் அவனை புரட்டிப் போட்டது .
ஒரு தனியார் பேரூந்து நடத்துனராக வாழ்க்கையை தொடங்கி,
ஸ்டுடியோ உரிமையாளராகி, துணுக்கு எழுத்தாளராக,
வானொலி எழுத்தாளராக,
பகுதி நேர செய்தியாளராக, பத்திரிக்கையின் தொடர் எழுத்தாளராக,
பின் வால்யூம் வால்யூமாக எழுதும் திறன் படைத்த எழுத்தாளராக, தொலைக்காட்சி தொடர்களின்
ஜீவ ஊற்றாக,
குறும்படம், திரைப்படம்
என தன் எல்லைகளை விரித்துக் கொண்டு
சிகரங்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறான்…அந்த சிறுவன். அவர்தான்
இந்நாளைய
முத்தாலங்குறிச்சி காமராசு.
இன்று அவருக்கு பிறந்த நாள்.
நெல்லைக்களஞ்சியம் ஆவணப்படத்திற்காக
நான் ஏற்கனவே வாசித்த
பல நூல்களை
இப்போது மறுவாசிப்புக்கு உட்படுத்தியிருக்கின்றேன்.
அந்த வகையில்
நேற்று இரவுதான் முத்தாலங்குறிச்சி
காமராசுவின்
” என் கிராமத்தின் கதை… ” நூலை வாசித்தேன்.
இன்று அவரது பிறந்த நாள்
என்பது தெரியாமலே
காலையில் தொலைபேசி மூலம்
புத்தகம் குறித்து சில சந்தேகங்கள் கேட்டேன். அவரும் வழக்கம் போல் என்னிடம் பேசினார்.
என் ஆவணப்படத்திற்கு களப்பணிக்கு நீங்கள்
உதவ வேண்டும் என்று கேட்டேன். அவர் இரு கரம் நீட்டி வரவேற்கிறேன் என்றார்.
கோயில், குளம், நதி, சித்தர்கள், ஜமீன்கள் என எழுதிக் குவித்துக் கொண்டிருக்கும் இவர், வெளியிடும் எல்லா புத்தகத்திலும் கடைசி பக்கத்தில் எனது அடுத்த வெளியீடு என்று துணிச்சலாக அறிவிப்பார். அதன்படியே செய்தும் விடுவார்.
இவரது
பேனா மை
வற்றாத நதியை போன்றது…
வாழ்க வளமுடன்
என்றும் நலமுடன்…
என்றும் அன்புடன்,
ச.முத்தமிழ்
(999 470 460 4)
#தாமிரபரணி தந்த #நூல் ஐயா Muthalankurichi Kamarasu அவர்களுக்கு (17-01-2024) இதயகனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்…


