பெரியதாழையில் கடல் அரிப்பு ஏற்படும் பகுதிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம், பெரியதாழை சுற்றிலும் சுமார் 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் அனைத்தும் கடற்கரை பகுதியில் இருப்பதால் அடிக்கடி கடல் அரிப்பு ஏற்பட்டு வீடுகள் சேதமடைந்து வருகிறது. இதனால் இந்த பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த வருடம் இந்த பகுதியில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டது. ஆனாலும் அந்த தூண்டில் வளைவு அதிக தூரம் இல்லாத காரணத்தால் மீண்டும் கடல் அரிப்பு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வருட காலமாக கூடுதலாக தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று பெரியதாழை பகுதி கடற்கரை கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று நேரில் அவரிடம் இதுகுறித்து புகார் மனு அளித்தனர். இதனால் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரடியாக பெரியதாழை பகுதியில் உள்ள கடற்கரை கிராம மக்களையும், கடல் அரிப்பு ஏற்படும் இடம் மற்றும் தூண்டில் வளைவு அமைத்துள்ள இடங்களை ஆய்வு செய்தார். அதன்பின்னர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதி அளித்தார்.
இதற்கிடையில் கடற்கரை பகுதியில் அதிக அளவில் பிளாஸ்டிக் கழிவுகள் கிடந்ததை கண்டி மாவட்ட ஆட்சியர் சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் கடிந்து கொண்டார். மேலும் இதனை உடனே அகற்ற வேண்டும் என்றார்.
=====


