தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல் புதிய வட்டத்தினை, தமிழ்நாடு முதலமைச்சர் காணொளிக்காட்சிக் மூலம் தொடங்கி வைத்தார்கள். அதனை தொடர்ந்து, ஏரல் வட்டாட்சியர் அலுவலகத்தை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல் புதிய வட்டத்தினை, தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி இன்று காணொளிக்காட்சிக் மூலம் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து, ஏரல் வட்டாட்சியர் அலுவலகத்தை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றினார். பின்னர், ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல் பகுதியில் புதியாக தாலுகா அமைக்க வேண்டும் என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. மக்களின் கோரிக்கையிளை நிறைவேற்றும் விதமாக, முதலமைச்சர் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில், ஏரலில் புதிய தாலூக உருவாக்கப்படும் என அறிக்கையிட்டார்.
அதனடிப்படையில், முதலமைச்சர் சென்னையிலிருந்து காணொளிக்காட்சி மூலமாக, ஏரல் புதிய வட்டத்தினை, தொடங்கி வைத்துள்ளார். ஏரல் பகுதியில் ஆறுமுகமங்களம், பெருங்குளம், ஆழ்வார்திருநகரி என 3 குறுவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 45 வருவாய் கிராமங்கள் மற்றும் 6 பேரூராட்சிகளை கொண்டுள்ளது. இந்தப் பகுதியில் உள்ள மக்கள் கோரிக்கை மனு அளிப்பதற்காக சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் திருச்செந்தூர் மற்றும் திருவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை மனு அளித்து வந்துள்ளனர்.
தற்போது அவர்களது சிரமங்களை போக்கும் வகையில், ஏரல் பகுதியிலே புதிய வட்டாட்சியர் அலுவலகத்தை, தற்காலிக கட்டடிடத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். விரைவில், புதிய வட்டாட்சியர் அலுவலகம் கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல் புதிய வட்டத்தினை தொடங்கி வைத்த, தமிழ்நாடு முதலமைச்சருக்கு, இந்த பகுதி மக்களின் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என ஆட்சியர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், பாராளுமன்ற உறுப்பினர் ஜெ.ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன், சார் ஆட்சியர் பிரசாந்த் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர்(பொ) சுகுமார், ஏரல் வட்டாட்சியர் மலர்தேவன், திருவைகுண்டம் வட்டாட்சியர் சந்திரன், முக்கிய பிரமுகர்கள் எஸ்.திருப்பாற்கடல், மு.ராமச்சந்திரன், ராஜ்நாராயணன், ஆறுமுகநயினார், ஜி.பெருமாள்சாமி, அழகேசன், குணசேகரன், பிச்சைபாண்டியன், பொன்முருகன், துணை வட்டாட்சியர்கள் சேகர், கண்ணன், கோபாலகிருஷ்ணன் மற்றும் பல்வேறு வியாபார சங்க பிரதிநிதிகள். விவசாய சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


