அனுஷ்கா சர்மா (பிறப்பு: 1 மே 1988) இந்தித் திரைப்பட, விளம்பர நடிகை ஆவார். இவர் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ரப் நே பனா தி ஜோடி திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அனுஷ்காவின் தந்தை கலோனல் அஜய் ஒரு இராணுவ அதிகாரி மற்றும் அவரது தாய் ஆஷமா இல்லதரசி ஆவார். ஆரம்ப கல்வியை இராணுவ பாடசாலையில் பயின்ற ஷர்மா பெங்களூரில் உள்ள மவிண்ட் கார்மல் கல்லூரியில் கலைத்துறையில் பட்டத்தினை பெற்றார். பின்னர் மாடலிங் துறையில் ஈடுபட மும்பைக்கு சென்றார்.அனுஷ்கா இந்தியத் துடுப்பாட்ட வீரர் விராட் கோலியை 2017 திசம்பர் 11 இல் இத்தாலியில் திருமணம் புரிந்து கொண்டார்.



