தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் பத்திரிக்கையாளர்கள் கேள்விக்கு வை.கோ. மலுப்பல் பதில் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு பிரச்சாரத்தினை ம.தி.மு. க பொது செயலாளர் வை.கோ நேற்று மாலை 5 மணிக்கு செய்துங்கநல்லூரில் துவக்கினார். அவரை திமுக தெற்கு மாவட்டசெயலாளர் அனிதா ராதா கிருஷ்ணன், மதிமுக மாவட்ட செயலாளர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் திமுக நல்லமுத்து, மதிமுக காலங்கரை கந்தசாமி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதற்கிடையில் தாமிபரணியில் 800 கோடி ரூபாய் ஓதுக்கீடு செய்ததாக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார். ஆனால் அதை அன்றே முதலமைச்சர் எடப்பாடி மறுத்துள்ளார். இதை பற்றி தாங்கள் கருத்தென்ன என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளிக்க மறுத்த வை.கோ. இப்போது நான் ஸ்டெர்லைட் பிரச்சனை பற்றியும் காவேரி பிரச்சனையை பற்றியும் பேச வந்திருக்கிறேன். இதை பற்றி கேட்காமல் மற்ற கேள்விகளை கேட்பது முறையல்ல என மறுத்தார். இந்த செய்தியை பத்திரிக்கையாளர்கள் வெளியிடபோவதில்லை என்று பதில் கூற மறுத்த அவர், இறுதியில் பொன் ராதாகிருஷ்ணன் எந்த அடிப்படையில் கூறினார் என்று தெரியவில்லை. அதை பற்றி முதலமைச்சருக்கு ஒன்றும் தெரியாமல் இருக்கிறது என்று நினைக்கும் போது வேதனை அளிக்கிறது. என்று கூறினார்.
பத்திரிக்கையாளர் கேள்வி பதில் அளிக்க மறுத்த வைகோ பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


