அனைத்து கிராமங்களில் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அம்மா திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி வட்டத்தில் மாப்பிள்ளையூரணி கிராமத்திலும், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் கொற்கை கிராமத்திலும் திருச்செந்தூர் வட்டத்தில் கடையனோடை கிராமத்திலும், சாத்தான்குளம் வட்டத்தில் கருங்கடல் கிராமத்திலும், கோவில்பட்டி வட்டத்தில்; சிவந்திபட்டி கிராமத்திலும், விளாத்திகுளம் வட்டத்தில்; எஸ்.குமாரகிரி கிராமத்திலும், எட்டயபுரம் வட்டத்தில் குமாரகிரி கிராமத்திலும், ஓட்;டப்பிடாரம் வட்டத்தில்; எப்போதும்வென்றான் கிராமத்திலும் கயத்தார் வட்டத்தில் சிதம்பரம்பட்டி கிராமத்திலும் 23.03.2018 (வெள்ளிக்கிழமை) அன்று வட்டாட்சியர்கள் தலைமையில் அம்மா திட்ட முகாம் நடைபெறவுள்ளது. மேற்படி முகாம்களில் மக்களின் குறைகளை தீர்க்கும் வண்ணம் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் தி;ட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு – இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள், மற்றும் வருவாய் துறையினரால்; நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளது.
இந்த முகாம்களில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


