தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடர் பிரச்சாரம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இன்று மாலை ஸ்ரீவைகுண்டத்தில் பிரச்சாரத்தை துவங்கிய அவர் அப்போது நிருபர்களிடம் பேட்டியளித்தார். அதில்,
திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடியில் கடந்த 21ம் தேதி பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது மோடியே விமர்சித்த வைகோவை கண்டித்து பிரச்சார வாகனம் முன்பு கருப்புக்கொடி காட்ட முயன்றனர். அப்போது பிஜேபி கட்சியினருக்கும், மதிமுக தொண்டர்களுக்கும் இடையே மோதல் உண்டானது. இதில் வைகோ பிரச்சார வாகனம் மீது பிஜேபியினர் கல்வீச்சு தாக்குதல் நடத்தியதாக வைகோ குற்றம் சாட்டினார். மேலும் நான்கு கற்கள் தனது பிரச்சார வாகனம் மீது விழுந்ததாகவும், தன் மீது விழுந்திருந்தால் தான் உயிரிழந்திருப்பேன் என்றும் பேசினார். இதனை தாங்காமல் தான் எனது தொண்டர்கள் பிஜேபியினர் மீது பாய்ந்தனர். ஆனால் போலிசார் பிஜேபி கட்சியினரை கட்டுப்படுத்தாமல் என் தொண்டர்கள் மீது தடியடி நடத்தியது கண்டிக்கதக்கது. பிஜேபி கட்சியினர் முழுக்க முழுக்க திட்டமிட்டு வன்முறையில் ஈடுபட்டனர். தமிழகத்தில் தற்போது உருவாக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் தமிழகத்தை அழிக்கவே உருவாக்கப்பட்டுள்ளது. நீயூட்ரினோ, ஸ்டெர்லைட், ஹெட்ரோ கார்பன், அணுஉலை என அனைத்தும் தமிழகத்தை அழிக்கவே உருவாக்கப்படுகிறது. நீட் தேர்வால் இனி கிராமபுற ஏழை ஏளிய மாணவர்களால் இனி டாக்டராக முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தமிழகத்திற்கு பிரச்சனை ஏற்படும் அனைத்திலும் மதிமுக முன்னால் நின்று போராடிக்கொண்டிருக்கிறது. என்றார்.


