செய்துங்கநல்லூர் கிளை நூலகத்தில் உலக புத்தக தின விழா நடந்தது. வாசகர் வட்ட தலைவர் திருமலை நம்பி தலைமை வகித்தார்.
செய்துங்கநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் சதீஷ் பரிசு வழங்கினார். கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற எம்.எம். நடுநிலைப்பள்ளி மாணவி ஹைரூன் பாத்திமா, புனித லூசியா ஆர்.சி.நடுநிலைப்பள்ளி மாணவி கிரேசியாள் ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது. எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கௌரவிக்கப்பட்டார். துணை செயலாளர் பாலசுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் கணேசன், நடராஜன், கோபால கிருஷ்ணன், செல்லப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நூலகர் துரைராஜ் நன்றி கூறினார்.


