செய்துங்கநல்லூரில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒன்றிய செயலாளர் அப்பாக்குட்டி தலைமை வகித்தார். ஒன்றிய குழு உறுப்பினர் குணேஷ்வரி முன்னிலை வகித்தார். ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் காவல் துறையின் துப்பாக்கி சூட்டில் வீரமரணமடைந்த மாணவி ஸ்னோலின் உட்பட 11 போராளிகளுக்கும் அஞ்சலி செலுத்தியும், காவல் துறையை ஏவி மக்களை கொடுரமாக கொன்று குவித்த மத்திய மாநில அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா பகுதி தலைவர் அப்துல் காதர், மாவட்ட தலைவர் அப்பாஸ், மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் ஒன்றிய குழு உறுப்பினர் மணி, கொம்பையா, ஞானமுத்து, சிவசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


