இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த தேசிய அளவிலான கலைஞர்கள் மற்றும் கலைநிகழ்ச்சி நிகழ்த்துபவர்களின் தகவல் தேசிய அளவில் தொகுக்க ஏதுவாக கட்டிடக் கலைஞர், சிற்பக் கலைஞர், ஓவியம், இசை, நடனம், எழுத்து, கைவினை, புகைப்படக் கலைஞர், நாடகம், திரை மற்றும் பொம்மலாட்டக் கலைஞர்கள் (Data Collection Form) என்ற படிவத்தினை அளித்திட வேண்டும்.
இதற்காக கலைஞர்கள் தங்களது சுயவிவரக் குறிப்பு மற்றும் இணையதள முகவரியுடன் 31.08.2018க்குள் மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமையாசிரியரை அனுகி பதிவு செய்திட வேண்டும். மேலும் விவரங்களுக்கு தலைமை ஆசிரியை, மாவட்ட அரசு இசைப்பள்ளி குருஸ்புரம் சமுதாய நலக்கட்டிடம், தூத்துக்குடி என்ற முகவரியிலும் தொலைபேசி எண்:0461-2300605 தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்கள்.


